தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அரசு அனுமதி தேவை!

கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அரசு அனுமதி தேவை!

கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அரசு அனுமதி தேவை!


UPDATED : அக் 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனினும், நிகர்நிலை பல்கலைக்கழகங்ளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் பட்டம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, பல்கலைக் கழகங்களிடமிருந்து மாணவர்களின் பட்டங்களைப் பெற்ற 15 நாட்களுக்குள், கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி கூறியதாவது:
தமிழக கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும் முறையை ஒழுங்குபடுத்த, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. இந்த அறிக்கையை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் விவாதித்து, பட்டமளிப்பு விழா விதிமுறைகளை வகுத்திருக்கிறது.
இந்த விதிமுறைகள்,  22ம் தேதி நடைபெறும் தமிழக கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் முதல்வர்களுக்கு வழங்கப்படும். இனி, இந்த விதிமுறைகளை பின்பற்றித் தான் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற வேண்டும். பட்டமளிப்பு விழா மேடையில், கல்லூரி முதல்வர், செயலர், சிறப்பு விருந்தினர், துறைத் தலைவர்கள் மட்டுமே அமர வேண்டும்.
பட்டமளிப்பு விழா அணிவகுப்பின்போது, குறிப்பிட்ட இசையை மட்டுமே இசைக்க வேண்டும். சினிமா பாடல்களை இசைக்கக் கூடாது. பட்டமளிப்பு விழா ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்க வேண்டும். இவற்றில், பதிவு செய்யப்பட்ட இசையை மட்டுமே ஒலிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள் இடம்பெறக் கூடாது.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் சால்வை, மாலை அணிவிக்கக் கூடாது. பரிசுப் பொருள் வழங்கக் கூடாது. குத்துவிளக்கு ஏற்றக் கூடாது. கல்லூரிகள், பல்கலைக் கழகத்திடமிருந்து மாணவர்களின் பட்டங்களைப் பெற்ற 15 நாட்களுக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும். பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இருக்கக் கூடாது.
பட்டமளிப்பு விழா உறுதிமொழியில் என்ன வாசகங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை மாற்றக் கூடாது. என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை, வேந்தர், மாநில, மத்திய அமைச்சர்கள், துணைவேந்தர் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

பல்கலைக் கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பட்டமளிப்பு விழா அணிவகுப்பில் இடம்பெறலாம். இந்த விதிமுறைகளை தனியார் பல்கலைக் கழகங்களும் கடைபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். பல்கலைக் கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக மாநில உயர்கல்வி அமைச்சரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றார் ராமசாமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us