கற்றலில் குறைபாடு: எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை.யில் புதிய படிப்பு!
கற்றலில் குறைபாடு: எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை.யில் புதிய படிப்பு!
UPDATED : அக் 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
டிக்ஸ்லெக்ஸியா போன்ற கற்றலில் குறைபாடு குறித்த படிப்பு நாட்டிலேயே முதன் முறையாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜினியரிங், சார்டர்ட் அக்கவுண்டன்சி மற்றும் சட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் தவிர, வேறு பட்டதாரி மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் தெரிவித்தார்.
இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடைபெறும். கற்றலில் குறைபாடு இருப்பதைக் கண்டறிவது குறித்தும் அதைக் களைவதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு உதவ சில தொண்டு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளிடம் உள்ள சிக்கல் தெரியாமல் உள்ளனர். இதுபோன்ற குறைபாட்டுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதுமானதாக இருக்காது என்கிறார் இந்த படிப்பை வடிவமைத்த டாக்டர் பி. விருத்தகிரிநாதன்.
இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் படிப்பைக் கற்றுத்தருவதற்கு சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். சில நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த படிப்பை மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
