தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கணிதப் பாட ஆய்வகம்!

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கணிதப் பாட ஆய்வகம்!

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கணிதப் பாட ஆய்வகம்!


UPDATED : அக் 31, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் செலவில் 100 உயர்நிலைப் பள்ளிகளில் இத்தகைய ஆய்வகம் திறக்கப்படுகிறது.


கணிதத்தை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், கணக்கின் ஒவ்வொரு நிலையையும் செயல்பூர்வமாக மாணவர்கள் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயன்படும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் கணித ஆய்வகம் திறக்கப்பட உள்ளன. முதலில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆய்வகம் துவக்கப்படுகிறது.


அல்ஜீப்ரா, எண்ணியியல், அளவியல், ஜாமெட்ரி உள்ளிட்ட  93 வகையான கணித மாதிரிகளின் பொருட்கள் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் இந்த கணித மாதிரி பொருட்களைக் கொண்டு முழுமையான அளவில் ஆய்வகம் உருவாக்கப்படுகின்றன.

கணிதப் பாடத்திற்கென்று முழுமையான அளவில் வேறு எந்த மாநிலத்திலும் ஆய்வகம் கிடையாது. முதல் முறையாக தமிழகத்தில் தான் இந்த மாதிரியான ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கணித மாதிரி பொருட்களை வைத்து மாணவர்களே கணிதத்தை செய்து பார்க்கவும் முடியும். கணித அறிஞர்கள் ராமானுஜம், பிரம்மகுப்தா உள்ளிட்ட 40 பேரின் படங்களும், அவர்களுடைய கணித சாதனைகளும் இந்த ஆய்வகங்களில் இடம் பெறுகின்றன என்று திட்ட ஒருங்கிணைப்பாளரும், பிளஸ் 2 கணிதப் பாடப் புத்தக தயாரிப்புக்குழுவின் தலைவருமான பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us