ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம்: அழகப்பா பல்கலை நிராகரிப்பு
ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம்: அழகப்பா பல்கலை நிராகரிப்பு
UPDATED : அக் 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 24ம் தேதி, 21வது பட்டமளிப்பு விழா, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குமாறு மகாராஷ்டிர ரசிகர் மன்றத் தலைவர் ஆதிமூலம், பதிவாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.
பதிவாளர் இ.இளமதியன் கேட்டுக் கொண்டதால், ரஜினியின் பயோடேட்டாவை, பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார் ஆதிமூலம். இது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்க, பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
ரஜினி குறித்து திடீர் சர்ச்சை எழுந்ததால், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழகம் நிராகரித்து விட்டது. புதிய நடிகர் ஒருவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், 21வது பட்டமளிப்பு விழாவில் யாருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு கவுரவ பட்டம் வழங்கக் கோரி மனுவுக்கு மதிப்பளித்து பயோடேட்டா கேட்டோம். சிண்டிகேட் ஒப்புதலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே இது சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால், அத்திட்டத்தை நிராகரித்து விட்டோம். மற்றபடி புதிய நடிகர் தரப்பில் யாரும் எங்களிடம் பேசவில்லை என்று பதிவாளர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.
