தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய மோட்டரோலா திட்டம்

3 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய மோட்டரோலா திட்டம்

3 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய மோட்டரோலா திட்டம்


UPDATED : நவ 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாகவே ஆட்குறைப்பு நடவடிக்கையை மோட்டரோலா நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிறுவனத்தில் மொத்தம் 66 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகளவில் உள்ள தனது நிறுவன தொழிற்சாலைகளில் 4.5 சதவீத ஊழியர்களைக் குறைக்கப்போவதாக இந்த நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.


ஒரு காலத்தில் மார்க்கெட் லீடராக இந்த மோட்டரோலா நிறுவனத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு நோக்கியா, சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. இந்த நிறுவனத்தின் மொபைல் விற்பனை கடந்த ஆண்டில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டில் 3.1 பில்லியன் டாலராகக் குறைந்து விட்டது. லேமென் பிரதர்ஸ், வாஷிங்டன் மியூச்சுவல் ஆகியவற்றில் இந்த நிறுவனம் செய்த முதலீடு காரணமாக 141 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மோட்டரோலா நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us