தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வு நடத்துவது எப்படி?: முடிவு எடுப்பதில் தாமதம்!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வு நடத்துவது எப்படி?: முடிவு எடுப்பதில் தாமதம்!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வு நடத்துவது எப்படி?: முடிவு எடுப்பதில் தாமதம்!


UPDATED : நவ 02, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால் செய்முறைத் தேர்வு விவகாரம், தேர்வுக் கூடுதலாக ஐந்து நிமிடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் முடிவெடுக்க முடியாமலும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட முடியாமலும் தேர்வுத் துறை திணறி வருகிறது.


பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் நடைமுறைரீதியான செயல்பாடுகளை எளிமைப்படுத்தி மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


பிளஸ்2 பாடத்திட்டத்தில் கடினமான பாடப்பகுதிகளை நீக்குதல், பாடப்புத்தகத்தின் அளவை கணிசமாக குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் விரைவில் நீக்கப்பட உள்ளன.


தேர்வின் போது கேள்வித்தாளை நன்றாகப் படித்து புரிந்து கொள்ளாமல், அவசரத்தில் தவறான விடைகளை மாணவர்கள் எழுதிவிடக்கூடாது என்பதற்காக, கேள்வித்தாள்களை படிப்பதற்கு என்றே தனியாக 10 நிமிடம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவு மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.


டென்ஷன் இல்லாமல் கேள்விகளைப் படித்து புரிந்து கொண்டு சரியான விடையை எழுதுவதற்கு இந்த 10 நிமிடம் உதவுகிறது. 10 நிமிடத்திற்கு பிறகு வெற்று விடைத்தாள் வழங்கப்படும்போது, அதில் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை எழுதுவதற்கு ஐந்து நிமிடம் செலவாகிறது. அந்த நேரத்தையும் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.


எழுத்துத் தேர்வை முதலிலும் செய்முறைத் தேர்வை இறுதியிலும் நடத்தலாம் என்ற ஆலோசனையும் இருந்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகள் குறித்து விவாதிக்கவும் அது குறித்து இறுதி முடிவு எடுத்து அரசுக்கு பரிந்துரை செய்யவும் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் நடந்து பல நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை உயர்நிலைக் குழு அமைக்கப்படவில்லை.


வழக்கமான தேதிகளில் பொதுத் தேர்வை துவக்குவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. பிப்ரவரியில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற நிலையில் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் அது குறித்து முடிவு செய்து மாணவர்களுக்கு அறிவிக்கவும் போதிய கால அவகாசம் வேண்டும். இதுபோன்ற பணிகளை விரைந்து முடித்தால்தான் அதற்கேற்ப தேர்வுத்துறை செயல்பட முடியும்.


இதில் எதுவுமே இதுவரை நடக்காததால், பொதுத் தேர்வு குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமலும் அதற்கேற்ப ஆயத்த ஏற்பாடுகளில் இறங்க முடியாமலும் தேர்வுத் துறை திணறிவருகிறது.


மேலும், உயர்நிலைக் குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், கேள்வித்தாள் படிக்க கூடுதலாக ஐந்து நிமிடம் மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துவதில் மாற்றம் செய்வது போன்ற நடவடிக்ககள் வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வருமா அல்லது தள்ளிப் போகுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us