தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சார்க் மாணவர்களுக்காக டில்லியில் உருவாகும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

சார்க் மாணவர்களுக்காக டில்லியில் உருவாகும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

சார்க் மாணவர்களுக்காக டில்லியில் உருவாகும் தெற்காசிய பல்கலைக்கழகம்!


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் தொடங்கப்படும் முதல் சர்வதேசப் பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக இருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் 2010ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


2005ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் தெற்காசிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார். 2007ம் ஆண்டில் இந்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.


டில்லியில் இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அருகே மைதான் கார்கி என்ற இடத்தில் தெற்காசியப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை டில்லி வளர்ச்சி  ஆணையத்திடமிருந்து பெறுவதற்கு வெளியுறவு அமைச்சகம் ரூ.75 கோடி அளிக்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் இதர செலவுகளை சார்க் உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டியதிருக்கும்.


டில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அருகே இப்பல்கலைக்கழகத்தின் திட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமுறைகள், பாடத் திட்ட உருவாக்கம், பல்கலைக்கழக வளாகத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை இத்திட்ட அலுவலகம் மேற்கொள்ளும். இப்பல்கலைக்கழக உருவாக்கத்திற்காக தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.,) ஜி.கே. சாதா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவ நிபுணர் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


டில்லியில் தொடங்கப்படும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களே இருப்பார்கள். சார்க் உறுப்பு நாடுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  சார்க் நாடுகளிடையே நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்க்க இந்த பல்கலைக்கழகம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us