தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்மையான என்.ஆர்.ஐ.,களுக்கு மட்டுமே இடம்: சுப்ரீம் கோர்ட் ஆணை!

உண்மையான என்.ஆர்.ஐ.,களுக்கு மட்டுமே இடம்: சுப்ரீம் கோர்ட் ஆணை!

உண்மையான என்.ஆர்.ஐ.,களுக்கு மட்டுமே இடம்: சுப்ரீம் கோர்ட் ஆணை!


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர்களைவிட, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இந்த ஒதுக்கீட்டின் கீழ், டாலரில் பணம் வாங்கிக் கொண்டு என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ் இடம் அளிப்பது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.


இந்நிலையில், உத்தர்கண்ட் பாரஸ்ட் ஹாஸ்பிடல் மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கான கோட்டாவில், என்.ஆர்.ஐ., அல்லாதவர்களிடம் டாலரில் கட்டணம் வாங்கிக் கொண்டு இடம் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் (என்.ஆர்.ஐ.), என்.ஆர்.ஐ., அல்லாதவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் என்ற அடிப்படையில் இடம் அளிக்கப்பட்டதை ஆட்சேபித்த உயர்நீதிமன்றம், என்.ஆர்.ஐ., கோட்டாவுக்கு புதிதாக மாணவர்களைத் தேர்வு செய்யும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி அப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.
என்.ஆர்.ஐ.களிடமிருந்து ஸ்பான்சர் பெறும் இந்திய பிரஜைகள், கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி என்.ஆர்.ஐ., கோட்டாவின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெறுவதை ஏற்கமுடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.


நீங்கள் என்.ஆர்.ஐ.,க்கள் அல்லர். நீங்கள் டாலரில் பணம் செலுத்த விரும்புகிறீர்கள். இந்த நடைமுறையை நாங்கள் ஏற்க முடியாது. ஸ்பான்சர்ஷிப் பெறுவதைத் தவிர, உங்களுக்கும் என்.ஆர்.ஐ.,க்களுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் கிடையாது. உண்மையான என்.ஆர்.ஐ., மாணவர்களையே அந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us