தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: மாணவியின் கல்விக்கு உதவி

தினமலர் செய்தி எதிரொலி: மாணவியின் கல்விக்கு உதவி

தினமலர் செய்தி எதிரொலி: மாணவியின் கல்விக்கு உதவி


UPDATED : நவ 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சி கஸ்தூர்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி விஜயலட்சுமி. தந்தையின் ஆதரவு இல்லாத இவரை கூலி வேலை செய்து தாய் ஞானம் படிக்க வைத்தார். வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்துமாறு தாயும் சகோதரனும் வலியுறுத்தியதால், படிப்புக்கு உதவுமாறு மதுரை டி.ஆர்.ஓ., ராமச்சசந்திரனிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தார். இது பற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.


இதைப்பார்த்து மு.க. அழகிரி கேட்டுக்கொண்டதன் பேரில் துணை மேயர் மன்னன், அந்தப் பள்ளிக்கு வந்தார். மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது தாய்  ஞானத்திடம் முதல் கட்டமாக ரூ.20 ஆயிரம் வழங்கினார். மாணவியின் சைக்கிள் ஏற்கனவே அடகு வைக்கப்பட்டிருந்ததால் புதிய சைக்கிள், ஒரு செட் சீருடை, படிக்க தேவையான பொருட்களையும் அவர் வாங்கித் தந்தார். மாணவியின் கல்லூரிக் கல்வி வரை உதவி செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.


ஞானத்திற்கு பள்ளியிலேயே ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2400 சம்பளத்தில் துப்புரவு பணியும் வழங்கப்பட்டது. வடக்கு மண்டல தலைவர் இ.கி. முத்து, பள்ளி தலைமை ஆசிரியர் விமலா டெய்சி, உதவி தலைமை ஆசிரியர் லதா தேவதாஸ் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us