பாரதிதாசன் பல்கலை.யில் திருநங்கைகளுக்கு இலவச தொலைநிலைக் கல்வி!
பாரதிதாசன் பல்கலை.யில் திருநங்கைகளுக்கு இலவச தொலைநிலைக் கல்வி!
UPDATED : நவ 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக தமிழக அரசு அங்கீகரித்து, ரேஷன் கார்டுகளையும் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்காக தனி நல வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்களில் ஆண், பெண் தவிர மூன்றாம் பாலினம் என்ற புதிய பிரிவும் இந்த ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், கல்லூரிகளில் மாணவர்களின் கேலிப் பேச்சுகளுக்கு அஞ்சி, வழக்கமான கல்லூரிகளில் சேருவதில் திருநங்கைகள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், தொலைநிலைக் கல்வி மூலம் படிக்க விரும்பும் திருநங்கைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் பணி மேம்பாட்டு இன்ஸ்டிட்யூட் மூலம் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளும் திருநங்கைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
படிப்பு அல்லது தொழில் பயிற்சி மூலம் வாழ்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் திருநங்கைகளை ஆற்றல் மிக்கவர்களாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்கிறார் துணைவேந்தர் பொன்னவைக்கோ.
