தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை மருத்துவக் கல்லூரிப் படிப்புக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம்

சென்னை மருத்துவக் கல்லூரிப் படிப்புக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம்

சென்னை மருத்துவக் கல்லூரிப் படிப்புக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம்


UPDATED : நவ 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவிலயே முதன்முறையாக சர்க்கரை நோய் (டயபட்டலாஜி) முது நிலை பட்டயப் படிப்பு 1986-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.


1986-89-ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு நான்கு டாக்டர்களும் அதன் பிறகு ஆண்டுக்கு மூன்று டாக்டர்களும் இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை சுமார் 60 டாக்டர்கள் சர்க்கரை நோய் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்து பல்வேறு இடங்களில் மருத்துவப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த மருத்துவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தின்படி முழுமையான பயிற்சி பெற்றிருந்தாலும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்து வந்தது.


இந்நிலையில் முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சி காரணமாக இந்தப் படிப்புக்கு முன்தேதியிட்டு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சென்னை அரசு பொது மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், தென்னிந்திய சர்க்கரை நோய் மருத்துவர்கள் சங்கத்தின் பிரிவுச் செயலர் டாக்டர் பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us