தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடரும் வளர்ச்சி: பி.பி.ஓ., துறையில் மகிழ்ச்சி

தொடரும் வளர்ச்சி: பி.பி.ஓ., துறையில் மகிழ்ச்சி

தொடரும் வளர்ச்சி: பி.பி.ஓ., துறையில் மகிழ்ச்சி


UPDATED : நவ 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உலகெங்கும் சம்பளவெட்டு, பணியிழப்பு போன்ற பிரச்னைகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இந்த சூழலிலும் பி.பி.ஓ., துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. வெளிநாட்டுப் பணிக்கான அவுட்சோர்சிங் வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்நிறுவனங்களில் தொடர்ந்து ஆள் சேர்ப்பு நடந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.


அடுத்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் புதியதாக இத்துறையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது இத்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அடிப்படையில் பி.பி.ஓ., துறை ஐ.டி., துறையிலிருந்து மாறுபட்டது நிதிச்சிக்கல்கள் ஐ.டி., துறையை பாதிக்கும் அதே நேரம் பி.பி.ஓ., துறையைப்பாதிப்பதில்லை என்று இத்துறையின் வல்லுனர்கள் இது தொடர்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us