தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரம்பரை வைத்தியர் முறைக்கு எதிர்ப்பு: சித்தா மாணவர்கள் உண்ணாவிரதம்

பரம்பரை வைத்தியர் முறைக்கு எதிர்ப்பு: சித்தா மாணவர்கள் உண்ணாவிரதம்

பரம்பரை வைத்தியர் முறைக்கு எதிர்ப்பு: சித்தா மாணவர்கள் உண்ணாவிரதம்


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் இளங்கலையில் 500 பேர், முதுகலையில் 200 பேர் என மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் சித்த மருத்துவம் பயில்கின்றனர்.


தமிழகத்தில் பரம்பரை வைத்தியர்கள் என்றழைக்கப்படும் ஆர்.ஐ.எம்.பி., மருத்துவத்திற்கு தற்போது அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. அத்தகைய மருத்துவ முறைக்கு மீண்டும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு சித்த மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
தேசிய ஊரக மருத்துவ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்களை நியமிக்க மத்திய சுகாதார துறை நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை சித்த மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.
 
கன்னியாகுமரியில் அரசு துவக்குவதாக உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு பதிலாக சித்த வர்ம கல்லூரியை நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முதுநிலை பட்ட மாணவர் தாமோதரன் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us