ஜெயித்துக் காட்டுவோம்: சென்னையில் ஆர்வத்துடன் குவித்த மாணவர்கள்!
ஜெயித்துக் காட்டுவோம்: சென்னையில் ஆர்வத்துடன் குவித்த மாணவர்கள்!
UPDATED : நவ 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நவம்பர் 15ம்தேதி நடைபெற்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் நாள் நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் நாளிதழ், ஆண்டுதோறும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
பொதுத் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதில் துவங்கி, தேர்வை எப்படி எழுத வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது வரை பல்வேறு வகையான வழிகாட்டி குறிப்புகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.
காலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகாலை 4 மணியில் இருந்த மாணவிகள் குவிய ஆரம்பித்தனர். பிற்பகல் நிகழ்ச்சிக்காக மாணர்களும் படையெடுத்தனர். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே நிகழ்ச்சி நடத்தப்பட்டபோதும் இரு நிகழ்ச்சிகளிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மேடை நிகழ்ச்சி வெளியே ஒளிபரப்பப்பட்டது. அரங்கத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்ப்டடிருந்த சேர்களில் அமர்ந்து பெற்றோரும் மாணவர்களும் குறிப்புகளை எடுத்தனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற ஜெயித்துக் காட்டுவோம் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்தனர்.
பிறகு, திருவல்லிக்கேணி இன்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ராஜகோபால், மதியழகன் (தமிழ்), ஆனந்தன் (ஆங்கிலம்), கேசவன் (கணிதம்), மோகன்தாஸ் (அறிவியல்), மற்றும் அமைந்தகரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர் யுவராஜ் (சமூக அறிவியல்) ஆகியோர் பாடக் குறிப்புகளையும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், நிகழ்ச்சி மேடையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் குறிப்பெடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு முக்கிய கேள்விகள், புளூ பிரிண்ட் அடங்கிய புத்தகம், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் என்ற புத்தகம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் வழிகாட்டுதல் புத்தகம், ஸ்கிரிப்பிளிங் பேட் மற்றும் பேனா இலவசமாக வழங்கப்பட்டன.
