தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச.1-ம் தேதி முதல் சென்னை ஐ.ஐ.டி.,யில் கேம்பஸ் இன்டர்வியூ!

டிச.1-ம் தேதி முதல் சென்னை ஐ.ஐ.டி.,யில் கேம்பஸ் இன்டர்வியூ!

டிச.1-ம் தேதி முதல் சென்னை ஐ.ஐ.டி.,யில் கேம்பஸ் இன்டர்வியூ!


UPDATED : நவ 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கேம்பஸ் இன்டர்வியூ பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 25சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேசமயம் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை வேலைக்கு எடுக்க
சம்மதித்துள்ளன. இந்த எண்ணிக்கை 250 ஆக உயரலாம்.

கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்களில் 70 சதவீதம் இன்ஜினியரிங் துறை நிறுவனங்கள். கடந்த ஆண்டில் இந்த இன்ஜினியரிங் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 51 சதவீதம்தான். இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்களில் 10 சதவீதம் பைனான்ஸ் மற்றும் கன்சல்டிங் நிறுவனங்கள்.

கேம்பஸ் இன்டர்வியூவின் முதல் நாளில் மெக்கன்சி, மோர்கன் ஸ்டான்லி, ஸலம்பர்க்கர், ஷெல் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மைக்ரோசாப்ட், யாகூ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐ.டி.சி., அமேசான், சிஸ்கோ, கேட்டர்பில்லர், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளன.


2007-08ம் ஆண்டில் 1099 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்காக பதிவு செய்தனர். அதில் 833 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. சராசரி ஆண்டு சம்பளம் 6.5 லட்சம். இந்த ஆண்டு 1090 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர் என்று சென்னை ஐ.ஐ.டி.யின் துணைப் பதிவாளரும் மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரியுமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us