மேலூரில் ஜெயித்து காட்டுவோம்: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!
மேலூரில் ஜெயித்து காட்டுவோம்: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற டி.வி.ஆர்., அகாடமி சார்பில் மேலூர் மூவேந்தர் திருமண மண்டபத்தில் நடந்த தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள், தேர்வு எழுதலின் நுட்பங்கள் குறித்து ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ்களை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
பத்தாம் வகுப்பு:
ஆங்கிலம் குறித்து மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியை மேரி ரத்னா பாய்: ஆங்கிலத்தை புரிந்து கொண்டால் கடினமாக இருக்காது. பொதுவாக விடைகளை அடித்தல், திருத்தல் இன்றி வார்த்தைகளை தெளிவாக எழுதினால் போதும். கட்டுரைகளை சொந்தமாக எழுத வேண்டும்.
கணிதம் குறித்து தெற்குதெரு அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் அதிராமசுப்பு: முக்கிய கணக்குகளை பார்ப்பதை விட அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். முதலில் கிராப், ஜியாமெட்ரி போன்றவைகளை எழுத வேண்டும். தேவைப்படும் இடங்களில் பார்முலாக்களை குறிப்பிட வேண்டும்.
அறிவியல் குறித்து அல் அமீன் உயர்நிலை பள்ளி ஆசிரியர் அப்துல் ஜபார்: வேறுபாடுகள், பண்புகள், செயல்பாடு, தயாரிப்பு குறித்த வினாக்களை நன்றாக படித்து எழுதி பார்த்தால் தேர்வில் விடை எழுத முடியும். முக்கிய கேள்விகளுக்கு வரைபடங்களை வரைய வேண்டும்.
மெட்ரிக்:
அறிவியல் 2 குறித்து எஸ்.எஸ்.வி.சாலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் பிரபு: தியரி மற்றும் செய்முறை இருப்பதால் பாடங்களை ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். தாவரவியலில் ரி புராக்டஷன், சுற்றுப்புற சூழல் போன்ற பாடங்களில் கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உண்டு. வரைபடங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் குறித்து சுந்தர வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியை ரேவதி சுரேஷ்: கட்டுரைகளுக்கு வித்தியாசமான தலைப்புகள் கொடுக்க வேண்டும். வார்த்தைகளை முழுமையாக இடம் பெற செய்ய வேண்டும். கட்டுரை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். முக்கிய பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
கணிதம் குறித்து மில்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜான் வின்சென்ட்: புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு அடிக்கடி விடைகளை எழுதி பார்க்க வேண்டும். மன அழுத்தமின்றி பதட்டத்துடன் தேர்வை எழுதுவதை தவிர்க்க வேண்டும்.
அறிவியல் 1 குறித்து லீ சாட்லியர் மெட்ரிக் உயர்நிலை பள்ளி ஆசிரியை மங்கையர்கரசி: காப்பர், அலுமினியம், மெட்டல் பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவைகளை படிக்க வேண்டும். முக்கிய கேள்விகளுக்கு படத்துடன் விடையளிக்க வேண்டும்.
பிளஸ் 2:
ஆங்கிலம் குறித்து மதுரை சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.பழனிவேல்ராஜன்: இன்று முதல் படிக்க துவங்கினாலே போதும். நல்ல மதிப்பெண் பெற முடியும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற மொழிபாடங்களில் மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.
கணிதம் குறித்து மதுரை டி நோபிலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.சந்திரசேகர்: அணிகள், வெக்டர், கலப்பெண்கள், பகுமுறை வடிவ கணிதம், வகை நுண்கணிதம் பயன்பாடுகள் 2, தனிநிலை கணக்கியல் போன்ற பாடங்களை படித்தால் போதும் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முறையே பத்து, ஆறு மற்றும் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
வேதியியல் குறித்து ஊமச்சிகுளம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் வீ.சரவணன்: அணு அமைப்பு, ஆவர்தன அட்டவணை, எப் தொகுதி தனிமங்கள், வெப்ப இயக்கவியல், வேதி சமநிலை, ஈதர், நடைமுறை வேதியியல், அணுக்கரு வேதியியல் பாடங்களை படித்தால் ஐம்பது சதவீத மதிப்பெண் பெறலாம். முடிந்தளவுக்கு 7 முறை முழு தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.
இயற்பியல் குறித்து சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ஜி.குருபாலன்: நிலை மின்னியல், மின்னோட்டவியல், மின்காந்த துவண்டலும், மாறுதிசை மின்னோட்டமும், மின்னோட்டத்தின் விளைவுகள், கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இரட்டை பண்பு, அணுக்கரு இயற்பியல் பாடங்களை படித்தால் போதும்.
உயிரியல் குறித்து சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் டி.கணேசன்: விலங்கியலில் முதல் பாடத்தை படிக்க வேண்டும். தாவர செயலியல், தாவர உள்ளமைப்பியல், செல் உயிரியல் மற்றும் மரபியல்பாடங்களையும் படிக்க வேண்டும். மலர் வரைபடம் மற்றும் வகைபாடுகளை எழுதி பார்க்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியை ஒமேகா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஆவின் பாலகம், மீனா லேப், விவேகானந்தா சமுதாய கல்லூரி, செவன்த் சென்ஸ் கம்ப்யூட்டர் சென்டர் இணைந்து வழங்கின. மாணவர்களுக்கு தினமலர் ஜெயித்து காட்டுவோம் மாதிரி வினா புத்தகம், பேட்,பேனா இலவசமாக வழங்கப்பட்டன.
