தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் அறிவுரை

தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் அறிவுரை

தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் அறிவுரை


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக டி.வி.ஆர்., அகாடமி சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி சிவகங்கை ஆர்.எம்.ஆர்., மகாலில் நடந்தது. சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., யுடன் இணைந்து நடந்த நிகழ்ச்சியில், பொது தேர்வு வெற்றிக்கு எளிய  ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.
எம்.எஸ்.தண்டபாணி தொகுத்து வழங்கினார்.


ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ்:
பத்தாம் வகுப்பு:
எஸ்.எமிலிடாரதி, சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
சாதிப்போம் என்ற தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். சோம்பேறித்தனம், பொழுதுபோக்கு ஆகியவற்றை களைந்து முயற்சி, பயிற்சி, மன உறுதி போன்ற நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். கட்டுரையில் (எஸ்சே) முழு மதிப்பெண் பெற முதல் மற்றும் கடைசி மூன்று பாடங்களை நன்றாக படிக்க வேண்டும்.  தினமும் ஒரு கேள்வித்தாளை பயிற்சி செய்ய வேண்டும்.
எல்.பிரிட்டோ, மானாமதுரை அரச மகளிர் பள்ளி (கணிதம்):
பிதாகரஸ் தேற்றம், எதிர்கோணங்களில் கவனம் செலுத்தினால் 5 மதிப்பெண் பகுதியை எளிதில் எழுதலாம். ஜியாமெட்ரியில் வட்ட நாற்கரம் மற்றும் கிராப் பகுதியில் தொடுகோடு ஆகியவற்றில் கடின பயிற்சி தேவை.  தேர்வில் இப்பகுதியை முதலில் முடிக்க வேண்டும். வரைமுறை எழுதி முறைப்படி செய்தால் எளிதில் 10 மதிப்பெண் பெறலாம். அளவுகள், அளவுத்திட்டம் அவசியம்.
கே.தாமஸ் ஜோசப் சேவியர், சித்தலூர் அரசு உயர்நிலைப்பள்ளி (அறிவியல்):
படித்தவற்றை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். கடினமாக கருதும் பகுதிகளை இரவு துவங்குவதற்கு முன் வாசிக்க வேண்டும். பாடங்களில் பின்புறம் உள்ள கேள்விகளை முழுமையாக படித்தால் ஒரு மதிப்பெண் பகுதி எளிதாக இருக்கும். படங்களை தெளிவாக வரைய வேண்டும். தேர்வில் பயத்தை நீக்க வேண்டும்.

மெட்ரிக்.,:

ஐ.சார்லஸ்துரை, திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி (ஆங்கிலம்):
கேள்வித்தாளை இரு முறை படிக்க வேண்டும். பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். தனித்தன்மையுடன் பதில் அளித்தால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். துவக்கம் முதல் கடைசி வரை அடித்தல், திருத்தம் இல்லாமல் எழுதவேண்டும். பாராகிராப், கட்டுரைகளில் துணை தலைப்பிட்டு எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் வினாவுக்கு ஒரு வார்த்தை, பாராகிராப் க்கு 100 வார்த்தை, கட்டுரைக்கு (எஸ்சே) 200 வார்த்தைகளில் எழுத வேண்டும்.
டி.கருணாகரன் காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக்., பள்ளி (கணிதம்):
கேள்விகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புத்தகத்தில் உள்ள எடுத்துகாட்டு கணக்குகளை முழுமையாக செய்து பழக வேண்டும். பகுதி 9.3 ல் 8 முதல் 12 கேள்விகள், 9.3 ல் 1 முதல் 6 கேள்விகள் மற்றும்  7.1, 7.2, 7.3, 7.5 ஆகிய பகுதிகளை முழுவதும் படித்தால் 1, 2, 5 மதிப்பெண் வினாக்களுக்கு எளிதாக விடையளித்து நூறு மதிப்பெண் பெறலாம்.
பா.மதனா, சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக்., பள்ளி (அறிவியல்1):
படங்களை தெளிவாக வரைய வேண்டும். சமன்பாடுகளை பிழையில்லாமல் எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். வேதி குறியீடுகளை கவனமாக எழுத வேண்டும். தவறாக எழுதினால் மதிப்பெண் இழக்க நேரிடும்.
 
பி.முருகன், சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி (அறிவியல்2):
படிப்பில் ஈடுபாடு காட்ட வேண்டும். தொந்தரவு இல்லாத சூழலில் படிக்க வேண்டும். நேரத்தை கணக்கிட்டு படிக்கவும், தேர்வு எழுதவும் வேண்டும். தாவரவியலில், 1 முதல் 4 பாடங்களை முழுமையாக படித்தால் 65 மதிப்பெண் பெறலாம். விலங்கியலில் 1 முதல் 5 பாடங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இப்பாடங்களில் இருந்து 2, 5, 10 மதிப்பெண் வினாக்கள் அதிகளவில் கேட்கப்படும்.

பிளஸ் 2:

ஆர்.அமுதுகண்ணா, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
பாடம் (புரோஸ்), கதை (நான் டிடெயில்) பகுதிகளில் முதல் மூன்று "எஸ்சே' க்களையும் முழுமையாக படித்தால் 10 மதிப்பெண் எளிதில் பெறலாம். முதல் மூன்று "போயம்' களை "பாராகிராப்' பகுதிக்கு தயார் செய்ய வேண்டும். பாடங்களில் "பாராகிராப்' பகுதியில் அகிம்சை மற்றும் சத்தியாகிரகம், மார்க் ஆண்டனி பேச்சு ஆகியவை முக்கியம். கிராமர் மற்றும் 2 மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.
கே.பிரபாகரன், ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி (கணிதம்):
அணிகள், வெக்டர், கலப்பு எண்கள், பகுமுறை வடிவ கணிதம், வகை நுண் கணித பயன்பாடுகள்2, தொகை நுண் கணிதம், தனிநிலை கணக்கியல் பாடங்களை நன்றாக படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். தெரிந்த வினாக்களை முதலில் எழுதினால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். 1, 10, 6 மதிப்பெண் என்ற வரிசையில் விடைகளை எழுத வேண்டும்.
ஏ.பிரபாகரன், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி (இயற்பியல்):
நிலை மின்னியல், மின்னோட்டவியல், பகுப்பொருள் இரட்டை பண்பு மற்றும் சார்பியல் கொள்கை, அணுக்கரு இயற்பியல் ஆகிய 4 பாடங்களை மட்டும் (105 பக்கங்கள்) படித்தால் 85 மதிப்பெண் பெறலாம். 1,2,4,6,7,8 ஆகிய பாடங்களை (174 பக்கங்கள்) படித்தால் 135 மதிப்பெண் பெறலாம். தகவல் தொடர்பு பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள், குறை கடத்தி பாடத்தில் 1,3 மதிப்பெண் வினாக்களை மட்டும் படித்தால் போதும்.
எப்.ஜிந்தா அபுபக்கர் சித்திக், வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி (வேதியியல்):
அணுக்களின் அமைப்பு, டி மற்றும் எப் பிளாக், அணுக்கரு வேதியியல், கோ ஆர்டினேஷன் வேதியியல், ஈதர், பயோ மாலிகூல்ஸ் உள்ளிட்ட 10 பாடங்களை மட்டும் படித்தால் 95 மதிப்பெண் பெறலாம். மெக்கானிசம் மற்றும் பெயர் எதிர்வினை பகுதிகளில் தலா இரண்டை மட்டும் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
ஜே.கருணாகரன், சிவகங்கை சாம்பவிகா பள்ளி (விலங்கியல்):
பெரிய வினாவுக்கு 15 நிமிடம், சிறு வினா 7 நிமிடம், குறு வினா 3 நிமிடம், ஒரு மதிப்பெண் 10 நிமிடம் என நிர்ணயித்து தேர்வு எழுத வேண்டும். உடற்செயலியல், நுண்ணுயிரியல், நோய் தடைகாப்பியல், சுற்றுச்சூழல் மரபியல், பயன்பாடு உயிரியல், பரிணாம கோட்பாடு பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பி.மாரிராஜன், மானாமதுரை ஒ.வெ.செ.மேல் நிலைப்பள்ளி (தாவரவியல்):
தாவர வகைப்பட்டியல், தாவர உள் அமைப்பியல், தாவர செயலியல் பிரிவுகளில் 3,5,10 மதிப்பெண் வினாக்களுக்கு நன்கு தயார் செய்ய வேண்டும். அனைத்து பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தயார் செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us