தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : நவ 26, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவம்பர் 26ம் தேதி நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒத்தி வைத்துள்ளன.


நவம்பர் 26ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கவில்லை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவ.26 முதல் 29ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
இதேபோல, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வுகளும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நடக்க இருந்த பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்லதாகவும் தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகத் தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us