தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., மாணவர்களுக்கு எம்.பி.ஏ.: பாரதியார் பல்கலையுடன் ஐ.சி.ஏ.ஐ., ஒப்பந்தம்!

சி.ஏ., மாணவர்களுக்கு எம்.பி.ஏ.: பாரதியார் பல்கலையுடன் ஐ.சி.ஏ.ஐ., ஒப்பந்தம்!

சி.ஏ., மாணவர்களுக்கு எம்.பி.ஏ.: பாரதியார் பல்கலையுடன் ஐ.சி.ஏ.ஐ., ஒப்பந்தம்!


UPDATED : டிச 01, 2008 12:00 AM

ADDED : மார் 18, 2009 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2008 12:00 AM ADDED : மார் 18, 2009 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டிசம்பர் 4ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது என்று இன்ஸ்டிட்யூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா (ஐ.சி.ஏ.ஐ.) தலைவர் வேத் ஜெயின் தெரிவித்தார்.


சென்னையில் நடைபெற்ற ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல அமைப்பின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பி.பி.ஏ., படிப்பில் இன்டர்மீடியட் மாணவர்களும் எம்.பி.ஏ., படிப்பில் இறுதியாண்டு மாணவர்களும் படிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும். சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கான எம்.பி.ஏ., படிப்புக் காலம் 9 மாதங்களாகும் என்றார்.


சி.ஏ., படிக்கும் மாணவர்களை பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்க்க மேலும் மூன்று பல்கலைக்கழகங்கள் ஆர்வமாக இருக்கின்றன. விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் அமைப்புகளுடன் ஐ.சி.ஏ.ஐ.,  இணைந்து செயல்பட உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


அனைத்துத்து படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளைப் பார்த்தால், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பணி சிறந்தது. மாதம் ரூ.6.31 லட்சம் வருவாய் தரக்கூடியதாக இருக்கிறது. இந்தப் படிப்புக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. வேறு துறையினருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்தப் பணியில் இருப்பவர்களின் தொழில் திறனும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளது என்றார் ஜெயின்.


சிறப்பிடம் பெற்ற சி.ஏ., மாணவர்கள் 16 பேருக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான் சான்றிதழ்களை வழங்கினார். பல்வேறு தொழில் துறைகள் பற்றிய அடிப்படை அறிவை சி.ஏ., படித்தவர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று அவர் பேசும்போது குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us