தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மாணவர்களுக்கு எப்போது விடிவு?

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மாணவர்களுக்கு எப்போது விடிவு?

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மாணவர்களுக்கு எப்போது விடிவு?


UPDATED : டிச 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் படித்து முடிக்கும் முன்பே பணி ஆணைக் கடிதம் கிடைத்தும்கூட, எந்தத் தேதியில் பணியில் சேர வேண்டும் என்ற கடிதம் கிடைக்காத நிலையில் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனால், கிடைத்த வேலையில் சேருவதற்காக எவ்வளவு நாள் காத்திருப்பது அல்லது கிடைக்கும் வேறு வேலைகளில் சேருவதா என்ற குழப்பத்தில் பல மாணவர்கள் ஆழ்ந்துள்ளனர்.


இதற்கிடையே, இந்த மாணவர்கள் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களிடம் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பேசி வருகிறது.


அண்ணா  பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்த சாப்ட்வேர் நிறுவனங்கள், பணியில் எப்போது சேருவது என்பதைத் தெரிவிக்காமல் உள்ளன. உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நிறுவனங்கள் முடிவெடுக்க முடியாமல் உள்ளன. மாணவர்களைத் தேர்வு செய்த தொழில் நிறுவனங்களை அணுகியுள்ளோம். மாணவர்கள் பணியில் சேரும் தேதியை வரும் பிப்ரவரிக்குள் தெரிவிப்பதாக சில தொழில் நிறுவனங்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளன என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் புதிய குடியரசுத் தலைவராக ஓபாமா பதவியேற்ற பிறகு, பொருளாதார நிலையில் மாற்றம் வரும் என ஐ.டி. நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன என்றார் அவர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us