தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.பி.ஓ. நிறுவனங்களில் வேலை இழப்பு பயம் வேண்டாம்!

பி.பி.ஓ. நிறுவனங்களில் வேலை இழப்பு பயம் வேண்டாம்!

பி.பி.ஓ. நிறுவனங்களில் வேலை இழப்பு பயம் வேண்டாம்!


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பி.பி.ஓ. நிறுவனங்களில் வேலை இழப்பு பயம் வேண்டாம் என்று நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.


உலகளாவிய பொருளாதார தேக்கநிலை இருந்தாலும், அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழ்நிலையிலும் பி.பி.ஓ., துறையில் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. இந்திய பி.பி.ஓ. தொழிலின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது. இந்தத்துறையில் ஆட்குறைப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை. புதிய தொழில் தேவைகளுக்காக மேலும் பலர் இத்துறைக்குத் தேவைப்படுகிறார்கள் என்று என்று பிசினஸ் புராசஸ் இன்டஸ்ட்ரி அசோசியேஷன் ஆஃப் இந்தியா (பி.பி.ஐ.ஏ.ஐ.,) அமைப்பின் தலைவர் தீபக் ஓல்யான் தெரிவித்துள்ளார்.


பி.பி.ஓ., துறையில் 2.5 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலைக்கு ஆளாகலாம் என்று முன்னாள் தலைவர் சமீர் சோப்ரா கடந்த வாரம் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் இதனை நிராகரித்தது. அதைத்தொடர்ந்து பி.பி.ஐ.ஏ.ஐ., தலைவர், இந்திய பி.பி.ஓ., துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நமது நாட்டில் 11 பில்லியன் டாலர் பணம் புரளும் பி.பி.ஓ., தொழில் துறையில் 7 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us