தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை இடையிலேயே விட்டவர்களுக்காக இக்னோவின் புதிய திட்டம்!

படிப்பை இடையிலேயே விட்டவர்களுக்காக இக்னோவின் புதிய திட்டம்!

படிப்பை இடையிலேயே விட்டவர்களுக்காக இக்னோவின் புதிய திட்டம்!


UPDATED : டிச 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நமது நாட்டில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, படிப்பை இடையிலேயே விட்டு விடும் மாணவர்கள் 40 சதவீதம் பேர். எனவே, இந்த மாணவர்களை உயர்படிப்பு படிக்கச் செய்யும் வகையில் அவர்களுக்கான வாழ்க்கைத் திறனுடன் கூடிய கல்வியை அளிக்க இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்று இக்னோவின் சென்னை மண்டல இயக்குநராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இதற்காக, பேராசிரியர் மனோகர் லாலை அமைப்பாளராகக் கொண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. படிப்பை இடையிலே விட்டு விட்ட மாணவர்கள்
தொடர்ந்து மேலும் படிப்பதற்கு ஏற்ப 6 மாத கால அளவிலான பிரிட்ஜ் கோர்ஸ் போன்ற படிப்பை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நிபுணர் குழு ஆராய்ந்து இக்னோவிடம் அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாதத்தில் இந்தப் புதிய படிப்பை அறிமுகப்படுத்தப்படும். இந்தப் படிப்பைப் படிக்கின்ற மாணவர்கள் தொடர்ந்து பட்டப் படிப்பைப் படிக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அக்சஞ்சர் நிறுவனத்துடன் இணைந்து பி.பி.ஓ., துறையில் ஓராண்டு டிப்ளமோ படிப்பையும் இக்னோ புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. இதேபோல,  தொழில்முனைவோர் 6 மாத சான்றிதழ் படிப்பும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேருவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10ம் வகுப்புதான். எனினும், பட்டப்படிப்பு படித்த மாணவர்கள்கூட, இந்தப் படிப்பில் சேரலாம். தனியாகத் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில், இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்காவும், அத்துறையில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்காகவும் என்.ஜி.ஓ., மேனேஜ்மெண்ட் என்ற சான்றிதழ் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்றார் பன்னீர்செல்வம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us