தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்:அண்ணாதுரை

நிலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்:அண்ணாதுரை

நிலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்:அண்ணாதுரை


UPDATED : டிச 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச விண்வெளி மையம் போன்று இந்தியாவும் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்குமா என்ற மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாதுரை, அது போன்ற திட்டம் இந்தியாவிடம் இல்லை. நிலவிலேயே விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்தியா ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
தொலைபேசி நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கான அண்ணாதுரையின் பதில்கள் கல்விமலர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி: விண்வெளி வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையத்தை பெங்களூருவில் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்துக்கு மத்திய அரசு 50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. துவக்க நிலையில் இந்த பயிற்சியில் 40 பேர் சேர்க்கப்படுவார்கள். அதிலிருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் விண்வெளி பயணத்துக்கு தயார் படுத்தப்படுவார்கள்.
ரஷ்ய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா சென்றது போல், மற்றொருவரை 2013ல் அனுப்பவும், 2015 வாக்கில் இந்தியா தயாரித்த விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் வாய்ப்பும் உள்ளது.
சந்திரயான்-1 திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதிலுள்ள 11 கருவிகளும் நன்கு இயங்குகின்றன. சந்திரயான் அனுப்பும் தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் ஹீலியம்-3 இருக்கிறதா என்பதை அறிய முடியும். இத்திட்டத்தின் வெற்றியால் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் வளர்ந்து வருவதை உணர்கிறேன்.
சந்திரயான்-2 திட்டத்துக்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகின்றன. 2012ல் இக்கலன் ஏவப்படும். 2020ம் ஆண்டில் நிலவுக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார். நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு இந்திய ஆய்வுக்கலன் அனுப்புவதற்கான சாத்தியங்கள் பற்றியும் எதிர்காலத்தில் ஆராயப்படும்.
இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us