தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம்: அரசு ஆணை
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம்: அரசு ஆணை
UPDATED : டிச 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதுகுறித்த உத்தரவில் தொடக்கக் கல்வித்துறை முதன்மை செயலர் குற்றாலிங்கம் கூறியிருப்பதாவது:
தொடக்கக் கல்வித் துறையில் நிர்வாகம் துரிதமாக நடக்க, உயர் அதிகாரிகளிடமுள்ள சில அதிகாரங்கள், கீழ் நிலையில் உள்ள
அலுவலர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குனரிடமிருந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள்:
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி அலுவலரே தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் விடுப்பில் சென்றால் கூடுதல் பொறுப்பு வழங்குதல்.
உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அஞ்சல் வழி கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க முன் அனுமதி வழங்குதல்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு கண்காணிப்பாளராக செல்ல உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்குதல்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வெளி மாநில பல்கலை பட்ட சான்றுகள் மதிப்பீடு செய்தல்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடமிருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள்:
ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் மேற்படிப்புக்கு முன்அனுமதி வழங்குதல்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளை பராமரித்தல்.
1 முதல் 5ம் வகுப்பு வரை தனி படிப்பு மூலம் பயின்று பள்ளியில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குதல்.
ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை ஆசிரியர் தேவையுள்ள பள்ளிக்களுக்கு மாற்று பணி அமர்த்துதல்.
1 முதல் 8ம் வகுப்புகளில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குதல்.
தொடக்கக் கல்வி இயக்குனரிடமிருந்து தற்போது இணை இயக்குனருக்கு ஒப்படைப்பு செய்யப்படும் அதிகாரம்:
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் அசையும், அசையா சொத்து வாங்குவதற்கானஅனுமதி வழங்கும் அதிகாரம் இணை இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
