UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
சூளைமேட்டில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஹேமலதா, பிரபாவதி, ரேவதி, ஆயிஷா சித்திக் ஆகிய மாணவிகளை ஸ்டேட் வங்கி தத்தெடுத்துள்ளது.
அவர்களது கல்விச் செலவுக்காக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலைகளை வங்கியின் மாவட்ட பொது மேலாளர் ஜி.எஸ். சுப்பிரமணியம் வழங்கினார். வங்கியின் சமூகச் சேவைத் திட்டத்தின் கீழ் அந்த நான்கு மாணவிகளும் தொடர்ந்து படிக்க பாரத ஸ்டேட் வங்கி கல்வி உதவித் தொகையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
