தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பஞ்சாப் பல்கலை.யில் புதிய படிப்பு!

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பஞ்சாப் பல்கலை.யில் புதிய படிப்பு!

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பஞ்சாப் பல்கலை.யில் புதிய படிப்பு!


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் புலனாய்வு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த படிப்பைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதற்காக உள்நாட்டு பாதுகாப்பு (இன்லேண்ட் செக்யூரிட்டி) என்ற ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பை பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் டிபன்ஸ் அண்ட் நேஷனல் செக்யூரிட்டி ஸ்டடீஸ் மையம் முடிவு செய்துள்ளது.
இந்தப் படிப்பைத் தொடங்க பல்கலைக்கழக சென்ட் அனுமதி அளித்துள்ளது. தொடக்கக் கட்டமாக 25 மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவர். மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் தத்தா தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பேரிடர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த பாடங்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும். பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் கலந்து பேசி பாடத்திட்டம் வகுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றையச் சூழ்நிலையில் பாதுகாப்புக்கு முழுவதும் போலீசையோ ராணுவத்தையோ நம்பி இருக்க முடியாது. பாதுகாப்பில் தன்னிறைவுடன் இருக்க வேண்டியது அவசியம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us