தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.டி.எஸ். துணைத் தலைவருக்கு அண்ணா பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்!

சி.டி.எஸ். துணைத் தலைவருக்கு அண்ணா பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்!

சி.டி.எஸ். துணைத் தலைவருக்கு அண்ணா பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்!


UPDATED : டிச 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த பட்டமளிப்பு விழாவில் காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என். லட்சுமி நாராயணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.


டி.ஆர்.டி.ஓ. அமைப்பில் பணியாற்றும் உயர் அதிகாரி கே. தமிழ்மணி பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். பல்கலைக்கழக வேந்தர் பர்னாலா, உயர்கல்வி அமைச்சர் கே. பொன்முடி, துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 67 ஆயிரத்து 411 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. அதில் 550 பேர் நேரில் பட்டம் பெறுகின்றனர். பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 89 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதில் 21 பேர் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் படிக்கும் மாணவர்கள். 29 பேர் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். பிஎஸ்ஜி கல்லூரியிலிருந்து 15 பேரும் சி.ஐ.டி., கல்லூரியிலிருந்து 11 பேரும் ஜி.சி.டி., கல்லூரியிலிருந்து 10 பேரும் தங்கப் பதக்கம் பெறுகின்றனர் என்று துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.


இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 337 பேர் பிஎச்.டி., பட்டம் பெறுகின்றனர். இதில் 377 பேர் சுயநிதிக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 160தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us