தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம்: அன்புமணி ராமதாஸ் கருத்து

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம்: அன்புமணி ராமதாஸ் கருத்து

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம்: அன்புமணி ராமதாஸ் கருத்து


UPDATED : டிச 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது அவர் இத்தகவலைக் கூறினார்.


மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான தகுதி மதிப்பெண்கள் 40 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் கருத்தாக இந்த எனது கருத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் கோச்சிங் நிறுவனங்கள் அதிகக்கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.


படிப்பு மதிப்பெண்களுடன், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து பார்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் யோசனை கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் பதில் அளிப்பதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் கூறிய கருத்துகள், தமிழகத்தில் உள்ள அட்மிஷன் நடைமுறை ஆகியவை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்
அன்புமணி.


தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற முறை 1997ம் ஆண்டு வரை இருந்தது. இந்த மதிப்பெண்கள் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பழங்குடியின மாணவர்களால் தகுதி பெறமுடியவில்லை என்று மத்திய அரசிடம் கேரள அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்கள் இரண்டு வகையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டின கீழ் 15 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.


2008-09ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 329 இடங்கள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டன. பழங்குடியினருக்கான 164 இடங்களில் 111 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள இடங்கள் காலியாக இருந்தன. மத்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, நிரப்பப்படுகின்றன என்றார் அன்புமணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us