தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ்: எஸ்.சி., எஸ்.டி., கட்டாய இடஒதுக்கீடுக்கு மசோதா

சிவில் சர்வீஸ்: எஸ்.சி., எஸ்.டி., கட்டாய இடஒதுக்கீடுக்கு மசோதா

சிவில் சர்வீஸ்: எஸ்.சி., எஸ்.டி., கட்டாய இடஒதுக்கீடுக்கு மசோதா


UPDATED : டிச 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவில் சர்வீஸ் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதை உரிமையாக்குவதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் பிரிதிவிராஜ் சவாண், மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையூட்டும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


சிவில் சர்வீஸ் பணிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்காக இடஒதுக்கீடு செய்வதில் அவ்வப்போது நிர்வாக ஆணைகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. அரசுமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இலக்கை நிலைநாட்டும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தபால் துறை சேவைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மர்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவையும் அவர் வாபஸ் பெற்றார்.


யூனியன் பிரதேசங்களுகான 2007-ம் ஆண்டு ஆணை மசோதாவுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. இதன்படி லட்சத்தீவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் வசித்தாலும் அவர்கள் பழங்குடியின மக்களாகவே கருதப்பட இச்சட்டம் வகை செய்கிறது. லட்சத் தீவு மக்களின் சமூக பொருளாதார பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us