UPDATED : டிச 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
மத்திய அரசின் சமூக நலத்துறை இந்த விருதை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நரசிங்கமங்கலத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் சகாதேவன். எட்டு வயது ஆகும்போது அவர் பார்வையிழந்தார். எனினும் இடைவிடாமல் படித்து மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். பார்வையற்றோருக்கான தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான உள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதுடன் ஊனமுற்ற 65 மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்பித்து வருகிறார். பொதுத்துறை நிறுவனங்களில் பார்வையற்றவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை பார்வையற்றோருக்கான தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது என்று சகாதேவன் தெரிவித்தார்.
