UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 01:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அத்துடன் கவுன்சிலிங்கிற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவயில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாரமரிப்பு, இளநிலை மீன்வளம் மற்றும் பி.டெக்., உணவு பதனிலீல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப் படிப்புகளின் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களிலும் ரேங்க் பட்டியல் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி காலை 9 மணிக்கும் பி.எப்.எஸ்சி., பி.டெக்., மற்றும் அனைத்துப் படிப்புகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகள் குறித்த கவுன்சிலிங் 14ம் தேதி காலை 9 மணிக்கும் நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகக்கழகம் தெரிவித்துள்ளது.