10ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பு?
10ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பு?
UPDATED : ஜூலை 02, 2009 12:00 AM
ADDED : ஜூலை 02, 2009 01:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில், பொதுநல அமைப்புகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் தேர்வினை ரத்து செய்வதில் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
பல்துறை நிபுணர்களும் ஒருமித்த கருத்து தெரிவிக்கவில்லை. மனோதத்துவ நிபுணர்கள் கூட, மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் பெரும் குழப்பம் நிலவுவதால் தீர்வு காண, ஓட்டெடுப்பு முறையில் மாணவர்களிடமே கருத்து கேட்கலாமா என ஆலோசனை நடக்கிறது.
இந்த ஓட்டெடுப்பில் ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களை பங்கேற்க செய்வது, ஆசிரியர்கள் மூலமே ஓட்டெடுப்பு நடத்துவது போன்ற ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.