UPDATED : ஜூலை 02, 2009 12:00 AM
ADDED : ஜூலை 02, 2009 01:12 PM
இது குறித்த செய்திக் குறிப்பில், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏர்இந்திய விமானங்கள் மூலம் செல்லும் இந்திய மாணவர்கள், கூடுதலாக ஒரு பேக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். லண்டன், பாரீஸ், பிராங்பர்ட் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், கூடுதலாக 10 கிலோ எடை அளவிற்கு உடைமைகளை எடுத்துச் செல்லலாம். இச்சலுகை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து ஏர்இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாடு செல்லும் மாணவர்கள் இங்கிருந்து அதிகமாக புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்களின் பேக்கேஜ் எடை கூடுகிறது. மாணவர்களின் இந்த தேவைக்காகவே இச்சலுகை திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.