படித்து விட்டு வேலை இல்லையா...?: பயிற்சி அளித்து வேலை!
படித்து விட்டு வேலை இல்லையா...?: பயிற்சி அளித்து வேலை!
UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 01:07 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் படித்த வேலை இல்லாத இளைஞர்களில் ஆண், பெண் ஆகியோருக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சிகளை முன்னோடி பயிற்சி நிறுவனங்களை கொண்டு கீழ்கண்ட தொழில் பிரிவுகளில் தரமான பயிற்சிகள் அளித்து வேலை வாய்ப்பு உத்தரவாதம் வழங்கப்படும். ஓட்டுனர் (இலகு ரகம் மற்றும் கன ரகம்), தையல் கலை, கார்மென்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன், ஜே.சி.பி., மிஷின் ஆபரேட்டர், செவிலியர் (நர்சிங்), கணினி மூலம் அட்வான்ஸ் ஏ.டி.டி.பி., கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் தோல் பொருள் தயாரித்தல். இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கான காலம் மூன்று முதல் எட்டு மாதங்கள். இப்பயிற்சியின் போது உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களைச் சேர்ந்த படித்த வேலை இல்லாத இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து, கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலரை நேரிலோ அல்லது 2766 4526 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.
