தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை பட்டதாரிகள் மாவட்டங்களிலேயே பதிவு செய்யலாம்

முதுகலை பட்டதாரிகள் மாவட்டங்களிலேயே பதிவு செய்யலாம்

முதுகலை பட்டதாரிகள் மாவட்டங்களிலேயே பதிவு செய்யலாம்


UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM

ADDED : ஜூலை 29, 2009 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM ADDED : ஜூலை 29, 2009 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியீட்டுள்ள அறிக்கை:


முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், பொறியியல், மருத்துவம், கால்நடை, வேளாண்மை போன்ற சிறப்பு கல்விகளில் பட்டம் பெற்றவர்களும், தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய, நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகின்றனர்.


இதற்காக, மதுரையில் ஒரு கிளை தொடங்கப் பட்டு செயல்படுகிறது. மதுரை, தேனி, திண் டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுக் கோட்டை, கரூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் மதுரை கிளையில் பதிவு செய்துகொள்ளலாம். மற்ற மாவட்டத்தினர் சென்னை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.


சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களிலும் நேரிடையாக சென்று பதிவு முடியாத பட்டதாரிகள், அவரவர் மாவட்டத்திலேயே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்துகொள்ள வழிவகைகள் செய்யப் பட்டுள்ளது.


அவ்வாறு பதிவு செய்வோரின் பதிவுப் படிவம் உரியவாறு சென்னை மற்றும் மதுரை தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு பதிவு அடையாள அட்டை அஞ்சலில் உரிய நபருக்கு அனுப்பப்படும். இதனால், பதிவுமூப்பு எதுவும் பாதிக்கப்படாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us