தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்திரதுர்க்காவில் ஐ.ஐ.எஸ்சி., புதிய வளாகம்!

சித்திரதுர்க்காவில் ஐ.ஐ.எஸ்சி., புதிய வளாகம்!

சித்திரதுர்க்காவில் ஐ.ஐ.எஸ்சி., புதிய வளாகம்!


UPDATED : ஆக 04, 2009 12:00 AM

ADDED : ஆக 04, 2009 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2009 12:00 AM ADDED : ஆக 04, 2009 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்திரதுர்க்கா மாவட்டத்தில் செல்லாகேர் என்ற இடத்தில் புதிய வளாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இடத்தைப் பார்த்த நிபுணர் குழு, இந்த இடத்தில் ஐ.ஐ.எஸ்சி., வளாகத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து குடபூர் கிராமத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.


இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாக ஐ.ஐ.எஸ்சி., இயக்குநர் பி. பலராம் தெரிவித்தார். இந்த இன்ஸ்டிட்யூட்டில் நூறு, நூற்று ஐம்பது விஞ்ஞானிகளும் ஆயிரம் ஆராய்ச்சியாளர்களும் தேவைப்படுவர். தேவைக்கு ஏற்ப விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


மரபுசாரா எரிசக்தி, விண்வெளி அறிவியல், தண்ணீர் வளத் தொழில்நுட்பம், சூழியல், சுற்றுச்சூழல் ஆகிய துறை ஆய்வுகளில் கவனம் செலுத்தப்படும். ஓராண்டுக்குள் இத்திட்டம் தொடங்கும் மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் இப்பணி முடிவடையும் என்றார்.


வருகிற செப்டம்பரில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us