UPDATED : ஆக 06, 2009 12:00 AM
ADDED : ஆக 06, 2009 12:36 PM
ஜூலையில் நடந்த 10ம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், தேர்வுத்துறை இணையதளம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் 11, 12,14 ஆகிய தேதிகளில் தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள், 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 19ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இருதாள் கொண்ட பாடங்களுக்கு 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடங்களுக்கு 205 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள:
www.dge1.tn.nic.in
www.pallikalvi.in
