UPDATED : ஆக 06, 2009 12:00 AM
ADDED : ஆக 06, 2009 03:57 PM
ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 14ம் தேதி வரை கறுப்பு பாட்ஜ் அணிந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எங்களது போராட்டத்தை அடுத்து அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைவரும் ஒட்டுமொத்தமாக கேஷிவல் லீவ் எடுப்போம். உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவோம் என்று சென்னை ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் தகுதிக்கேற்றபடி ஐ.ஐ.டி., ஊதியம் இல்லை. அத்துடன் புதிய திறமையாளர்களை ஈர்க்கக்கூடிய வகையிலும் ஊதியம் இல்லை. ஆறாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துதில் ஏற்படுள்ள காலதாமதத்தால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யைப் போல மற்ற ஏழு ஐ.ஐ.டி.,களிலும் ஆசிரியர்கள் இதேபோல கறுப்பு பாட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
