தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள்

கோவை பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள்

கோவை பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள்


UPDATED : ஆக 10, 2009 12:00 AM

ADDED : ஆக 10, 2009 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2009 12:00 AM ADDED : ஆக 10, 2009 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

www.buac.in, www.kalvimalar.com ஆகிய இணையதள முகவரிகளில் மாணவ, மாணவியர் தங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு: பாரதியார் பல்கலையின் இணைப்புக் கல்லூரிகள் நடத்திய தேர்வுகளில் முழுமையாக தேர்வு பெறாதவர்கள், நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.


பாரதியார் பல்கலை இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து, 198283ம் கல்வியாண்டு முதல் 20032004 கல்வியாண்டு வரை படித்த மாணவர்களில், முழுமையாக தேர்வு பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.


இவர்கள், தாங்கள் படித்த பாடப்பிரிவில் மறுபதிவு பெற்று, 20072008ம் கல்வியாண்டில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மறுபதிவு பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு ஆக., 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை, தேர்வு ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us