UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 01:35 PM
33 ஆண்டுகளில் இதுபோன்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலாண்மை படிப்பில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த புதிய முறைப்படி மாணவர்கள் தங்களது தேர்வை காலையிலோ அல்லது மாலையிலோ எழுதலாம் என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்., பேராசிரியரும் கேட் மைய அமைப்பாளருமான சதீஷ் தேவ்தர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு செஷன் வீதம் 10 நாட்களுக்கு கேட் தேர்வு நடத்தப்படும். இடம் இருப்பதைப் பொருத்து மாணவர்களுக்கு காலை அல்லது மாலை நேரங்களில் தேர்வு எழுத இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் 2.5 லட்சம் பேர் கேட் தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேட் தேர்வு நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 7ம் தேதி முடிவடைகிறது.
