தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் இன்ஜி.கல்லூரிகளில் காலியிடங்கள்: கட்டணம் குறைப்பு!

தனியார் இன்ஜி.கல்லூரிகளில் காலியிடங்கள்: கட்டணம் குறைப்பு!

தனியார் இன்ஜி.கல்லூரிகளில் காலியிடங்கள்: கட்டணம் குறைப்பு!


UPDATED : ஆக 15, 2009 12:00 AM

ADDED : ஆக 15, 2009 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2009 12:00 AM ADDED : ஆக 15, 2009 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த இடங்களை நிரப்புவதற்காக, பல தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டண சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன.


இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில், அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 102 இடங்கள் இருந்தன. இதற்காக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 708 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


கவுன்சிலிங்கில் 83 ஆயிரத்து 552 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. கவுன்சிலிங்கின் முடிவில் 30 ஆயிரத்து 550 இடங்கள் காலியாக இருந்தன. தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இந்த காலியிடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


எனவே, காலியிடங்களை செப்டம்பர் 14ம் தேதிக்குல் நிரப்பும் முயற்சியில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.


அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 62 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசு ஒதுக்கீட்டிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதால், பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கலக்கம் அடைந்துள்ளன. காலியிடங்களை எப்படி நிரப்புவது என்ற அச்சத்தில் உள்ள கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கி தங்களது கல்லூரிகளில் சேர்க்க முன்வந்துள்ளன.


இதனால் பல் தனியார் பொறியியல் கல்லூரிகள் தாங்கள் நன்கொடை வசூலிப்பதில்லை எந்றும் அரசு ஒதுக்கீட்டு கட்டணத்திலேயே மாணவர்களை சேர்த்துக் கொல்வதாகவும் விளம்பரம் செய்து வருகின்றன. அரசு ஒதுக்கீட்டுக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்திற்கே மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதாக மொபைல் போன்கள் மூலமாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மாணவர்களை இழுக்க முயன்று வருகின்றன.


அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் காலியாக இருந்த இடங்களுக்கு ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 546 பேரில் 453 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.


வெளிமாநில மாணவர்களுக்கான இடங்களில் இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கவுள்ள கவுன்சிலிங்கிற்கு 82 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us