எலக்ட்ரோகெமிக்கல் தொழில்நுட்பத்துக்கு சி.இ.சி.ஆர்.ஐ.,
எலக்ட்ரோகெமிக்கல் தொழில்நுட்பத்துக்கு சி.இ.சி.ஆர்.ஐ.,
UPDATED : ஆக 15, 2009 12:00 AM
ADDED : ஆக 15, 2009 11:29 AM
அ நிறம் | அளவு
தி சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின்(சி.இ.சி.ஆர்.ஐ.,) தலைமையகம் தமிழகத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. இது 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எலக்ட்ரோகெமிக்கல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே முதன்மையான கல்வி நிறுவனமாக சி.இ.சி.ஆர்.ஐ., விளங்குகிறது.
அறிவியல் வல்லுனர்கள், இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிற பணியாட்கள் உட்பட மொத்தம் 600 பேர் பணியாற்றுகின்றனர். இதன் வளாகம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் உள்ள ஆராய்ச்சிப்படிப்புகள்
- கோரோசன் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்
- இண்டஸ்ட்ரியல் மெட்டல் பினிசிங்
- பேட்டரிஸ்
(முதன்மை மற்றும் இரண்டாம் தரம்)
- எலக்ட்ரோமெட்டாலர்ஜி
- எலக்ட்ரோபைரோமெட்டாலர்ஜி
- எலக்ட்ரோகெமிக்கல்ஸ்
- மெட்டீரியல்சயின்ஸ்
- எலக்ட்ரோகெமிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்டு பொல்யூசன் கன்ட்ரோல்
சி.இ.சி.ஆர்.ஐ., கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்கில் நான்காண்டு பி.டெக்., படிப்பை வழங்குகிறது. கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் ஒருங்கிணைந்த இப்படிப்பு உலகிலேயே முதன்முதலாக இக்கல்லூரியிலேயே கற்றுத்தரப்படுகிறது. ஆராய்ச்சி சூழலில், திறன்மிகு வல்லுனர்களை கொண்டு இதில் உள்ள பாடத்திட்டங்கள் நடத்தப்படுகிறது.
அரசு மற்றும் கல்வி நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பல்வேறு படிப்புகளை இக்கல்லூரி வழங்குகிறது. இங்குள்ள படிப்புகள் மாணவர்களுக்கு தேவையான திறனையும், தேவையான நுட்பங்களையும் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் போதிய வேலைவாய்ப்புகளை எதிர்காலங்களில் பெறலாம்.
இங்குள்ள நூலகத்தில் 47 ஆயிரத்து 882 புத்தகங்கள் உள்ளன. இங்கு பயில விரும்பும் மாணவர்கள் வேதியியல், இயற்பியல், உலோக
தொழிற்கலை,இன்ஜினியரிங் பட்டப்படிப்பு அல்லது பாலிடெக்னிக் முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரோகெமிஸ்ட்ரி தொடர்பான 779 படிப்புகள் இக்கல்லூரியில் நடத்தப்படுகின்றன.
