sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை இன்றி தவிக்கும் 4,000 பைலட்கள்!

வேலை இன்றி தவிக்கும் 4,000 பைலட்கள்!

வேலை இன்றி தவிக்கும் 4,000 பைலட்கள்!


UPDATED : அக் 06, 2009 12:00 AM

ADDED : அக் 06, 2009 02:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2009 12:00 AM ADDED : அக் 06, 2009 02:15 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில் சங்கம் அமைத்துள்ள இவர்கள், வேலை கேட்டு போராட உள்ளனர்.


இந்தியாவில், ஏர்  இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 1953ம் ஆண்டு இயற்றப்பட்ட, ஏர் கார்ப்பரேஷன்  சட்டப்படி, பொதுமக்கள் பயணத்திற்காக, தனியார் விமான நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. பத்தாண்டுக்கு முன், ஏர்டாக்சி விமானங்களுக்கு, அரசு அனுமதி அளித்தது.


ஏர் சகாரா மற்றும் ஜெட்  ஏர்வேஸ் விமான நிறுவனங்கள், சேவையை தொடங்கின. 1994ம் ஆண்டு ஏர்  கார்ப்பரேஷன் சட்டம் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் விமான சேவையும், பொதுமக்களுக்கு கிடைக்க தொடங்கியது.

அக்., 30, 2007 வரை, இந்தியாவில் 439 விமானங்கள், வர்த்தக சேவையில் ஈடுபட்டுள் ளன.தற்போது இந்தியாவில், ஜெட்  ஏர்வேஸ், ஏர்  இந்தியா, எம்.டி.எல்.ஆர்., ஏர்லைன்ஸ், ஏர்இந்தியன் எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர் லைன்ஸ், புளூடார்ட் ஏவியேஷன், ஜெட்லைட், பாரமவுன்ட் ஏர்வேஸ், ஏர்இந்தியா ரீஜினல், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட், ஜெக்சன் ஏர்லைன்ஸ்கோ ஏர் ஆகிய விமான நிறுவனங்கள், உள் நாட்டு பயணிகளுக்கு சேவையாற்றி வருகின்றன.


அடுத்த 10 ஆண்டுகளில், சர்வதேச, உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்து, கடுமையான பைலட்கள் பற்றாக்குறை ஏற்படும் என, ஒரு புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இன்று, பல ஆயிரம் இளைஞர்கள், பைலட் பயிற்சியை முடித்து, வேலைக்காக காத்துக் கிடக்கின்றனர். .டி., துறையைக் காட்டிலும், வர்த்தக ரீதியான விமானங்களில் பணியாற்றும் பைலட்களுக்கு, சம்பளம் அதிகம். தினசரி லட்சங்களை சம்பளமாக பெறும் வாய்ப்புள்ள, பைலட் பணியில் சேர, ஏராளமான இளைஞர்கள் விரும்புகின்றனர். பைலட் பணிக்கு, முறையான பயிற்சி அவசியம். ஒரு மணி நேரம் பயிற்சி பெற, ஒவ்வொரு பயிற்சியாளரும் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.


பைலட் பயிற்சியை நிறைவு செய்ய, 25 லட்சம் ரூபாய் வரை, கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, பயிற்சியை நிறைவு செய்த நான்காயிரம் இளைஞர்கள், வேலை இல்லாமல் இருக்கின்றனர்.


இவர்கள் ஒன்று சேர்ந்து, தற்போது, வேலை இல்லா லைபட்கள் சங்கம் துவக்கியுள்ளனர். இச்சங்கத்தின் மூலம், பைலட்களின் ஓய்வு வயது வரம்பை குறைக்க வேண்டும்; மத்திய தேர்வாணைக்குழு (யு.பி.எஸ்.சி.,) மூலம் பைலட் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை, எழுப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us