பிரிட்டிஷ் கவுன்சில் இரண்டாம் நிலை ஆங்கில பயிற்சி துவக்கம்
பிரிட்டிஷ் கவுன்சில் இரண்டாம் நிலை ஆங்கில பயிற்சி துவக்கம்
UPDATED : அக் 06, 2009 12:00 AM
ADDED : அக் 06, 2009 04:35 PM
அ நிறம் | அளவு
அரசு துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது. அதற்கு ஆசிரியர்களிடையே முறையாக ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கும் திறன் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
அவற்றை மேம்படுத்தி, அரசு துவக்கப்பள்ளியிலும் தரமான ஆங்கிலத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கிலத்தை மாணவர்களிடையே கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி
கடந்த மாதம் யூனியனுக்கு 160 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அதே ஆசிரியர்களுக்கு மீண்டும் ஐந்து நாட்கள் பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலப்பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த பயிற்சியின் தொடர்ச்சியாக கருதப்படும் இந்த இரண்டாம் நிலை ஆங்கில பயிற்சி நான்கு கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக ஒவ்வொரு யூனியனுக்கும் தலா 40 ஆசிரியர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தொடங்கியது. இரண்டாம் கட்டமாக அக்., 26 முதல் அக்., 30ம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக நவ., 2 முதல் நவ., 6 வரையும், நான்காம் கட்ட பயிற்சி நவ., 9 முதல் நவ., 11 வரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்நிலை
பயிற்சியில் ஆங்கிலப்பாடத்தை மாணவர்களிடம் எவ்வாறு கையாள்வது மற்றும் அதன் உச்சரிப்பு, பாடிலேங்வேஜ் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை ஆங்கில பயிற்சியில் ஆசிரியர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, மைக்ரோ டெக்னாலஜியில் பாடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை சமர்ப்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.