UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 03:22 PM
அ நிறம் | அளவு
அவர்களை மிரட்டி படிக்க வைப்பதை விட, அன்பால் கட்டுப்படுத்துவது எளிது என்று நக்கீரன் கூறினார்.
கோவை
சென்னனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நக்கீரனுக்கு, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது.சிறந்த
முறையில் கற்பித்தல் பற்றி அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை அடிக்கவோ மிரட்டவோ கூடாது. சிறந்த மாணவர் களுடன் அவர்களை பழக அனுமதிக்க வேண்டும்.வீட்டில் பெற்றோர் படிக்காதவர்களாக இருந்தாலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவனிடம் பள்ளியில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என தினமும் கேட்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடங்களை முதலில் புரிந்து பின், மனப்பாடம் செய்யலாம். நன்கு படிக்கும் மாணவர் களை ஊக்குவிக்க பரிசுத் தொகை வழங்குவதை வழக்கமாக வைத்துள் ளோம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மாண வர்களின் பெற்றோரையும் எனக்குத் தெரியும். இது மாணவர்களுக்கும் தெரியும் என்பதால், கவனமாக படிக்கின்றனர். மாணவர்களை அடித்து மிரட்டி படிக்க வைப்பதை விட, அன்பால் படிக்க வைப்பது எளிது. இவ்வாறு நக்கீரன் கூறினார்.
