UPDATED : அக் 09, 2009 12:00 AM
ADDED : அக் 09, 2009 05:08 PM
அ நிறம் | அளவு
பாரீஸில் நடைபெறும் 35வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் அவர் பேசியதாவது:
புனிதமான பணியான ஆசிரியர் பணிக்கான மரியாதை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு முதலிடம் என்ற பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு செகண்டரி மற்றும் தொழில் கல்வியை வழங்குவதற்கு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இளைஞர்கள் படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களின் மனங்களைத் தூண்டும் வகையில் தரமான ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அமைதியான சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த சமூகம் உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.
இளைஞர்கள் மனதில் வளங்குன்றா வளர்ச்சி நெறிகளை ஏற்படுத்தும் வகையில் நமது உயர்கல்வி இருக்க வேண்டும். ஆனால் வளங்குன்றா வளர்ச்சியை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்குப் பதிலாக வளங்குன்றச் செய்யும் வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதில் தற்போதைய கல்வி முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வளங்குன்றா வளர்ச்சியில் மகாத்மா கூறிய அகிம்சை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்தியாவில் யுனெஸ்கோ சார்பில் அமைதி மற்றும் வளங்குன்றா வளர்ச்சிக்கான மகாத்மாக காந்தி கல்வி இன்ஸ்டிட்யூட்டை ஏற்படுத்த யுனெஸ்கோ முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது.
இந்தியாவில் அனைவருக்கும் கல்வி வழங்குவதை உத்தரவாதப்படுத்தும் வகையில் நாட்டில் கட்டாயத் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது என்றார் கபில் சிபல்.
