UPDATED : அக் 10, 2009 12:00 AM
ADDED : அக் 10, 2009 03:23 PM
இது ஏற்கனவே 2005ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன் மொழியப்பட்டு 2005-06லேயே மாநிலங்களின் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட முன்மொழிவு தான். 2010ம் ஆண்டு வரை இது செயல்படுத்தப்படும்.
இத் திட்டத்திற்கான செலவு ரூ.160 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசும் மாநில அரசுகளுமாக சேர்ந்து 75:25 என்ற விகிதத்தில் ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களும், சிக்கிம், லட்சத்தீவுகள், அந்தமான், டையூ டாமன், தாத்ரா நாகர் ஹவேலி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து 22 மாநிலங்களில் இந்தத் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கான ஐ.டி.ஐ.,க்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
2010 மார்ச் 31க்குள், இது செயல்படுத்திடப்படவுள்ளது.
இதன் கீழ் ஐ.டி.ஐ.,க்களுக்கு அதிக அதிகாரம் தருவது, இலகுத் தன்மையுடன் இயங்கிட அனுமதித்தல், தொழில் சார்ந்த உலகுடன் உறவுகளை மேம்படுத்துவது, எதிர்காலத்திற்கான துறைகளில் முறையான பயிற்சிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தனி மாநிலம் தேர்ந்தெடுத்த தேவைக்கேற்ற பன்முகத் திறன்களை உறுதி செய்யும் படிப்புகள் 2005ம் ஆண்டு முதலே ஐ.டி.ஐ.,களில் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
