UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 08:47 AM
பிரிட்டனை சேர்ந்த குயின்ஸ் இங்கிலீஷ் சொசைட்டி மாணவர்களின் ஆங்கில அறிவு குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.
இதற்காக, இளங்கலை பட்டம் படிக்கும் 28 மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 18 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்; 10 பேர் வெளிநாட்டினர். இது குறித்து, ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: ஆங்கில இலக்கணம், எழுத்துப் பிழைகள் மற்றும் நிறுத்தற்குறிகள் இடுதல் ஆகியவற்றில், வெளிநாட்டு மாணவர்களை விட, பிரிட்டன் மாணவர்கள் மூன்று மடங்கு அதிகமாக தவறு செய்கின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்தில், 52.2 சதவீதம் தவறு செய்கின்றனர். ஆனால், வெளிநாட்டு மாணவர்கள் 18.8 சதவீதம் மட்டுமே தவறு செய்கின்றனர். நிறுத்தற்குறிகளை பொறுத்தவரை, காலன்கள் பயன்படுத்த வேண்டிய இடங்களில், பெரும்பாலானவர்கள் செமி காலன்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளது.
