தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வழங்கும் கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்!

தினமலர் வழங்கும் கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்!

தினமலர் வழங்கும் கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்!


UPDATED : அக் 13, 2009 12:00 AM

ADDED : அக் 13, 2009 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2009 12:00 AM ADDED : அக் 13, 2009 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தினமலர், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை, கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் ஸ்ரீ சாய்ராம் மஹாலில் நடந்ததுஇதில் பிளஸ் 2 ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆசிரியர்கள் பேசியதாவது:

ராதிகா

, ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஆலாங்கொம்பு (தமிழ்):  தமிழ் பாடத்தை பொறுத்தவரை கையெழுத்து மிக நன்றாக இருக்க வேண்டும். நான்கு மதிப்பெண் வினாவுக்கு அவசியம் உட்தலைப்பும், எதுகை, மோனகையில் குறிப்பிட்ட வார்த்தைக்கு அடிகோடும் போட வேண்டும். கதை எழுதும்போது, அதிலுள்ள நீதியை பற்றி தலைப்பு எழுத வேண்டும்.


மணிமலர்

, சச்சிதானந்த ஜோதி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்லாறு (ஆங்கிலம்):  இலக்கண பிழை இல்லாமல் எழுத வேண்டும். நீங்கள் தினமும் வீட்டிலோ, நண்பர்களிடத்திலோ ஆங்கிலம் பேசவேண்டும். முதலில் தவறாகத்தான் வரும். பேசப் பேச பிழையில்லாமல் வார்த்தைகள் வரும். ஆங்கிலத்தில் ஆளுமை திறமையை வளர்த்துக் கொண்டால் தான், இரண்டாம் தாளில் அதிகமான கேள்விகளுக்கு விடை எழுத முடியும். அறிவியல், விவாதம் தலைப்பில் பொதுகட்டுரை வரும். அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுத வேண்டும்.


தங்கராஜ்

, தம்பு மேல்நிலைப்பள்ளி வீரபாண்டி பிரிவு (வணிகவியல்):  எடுத்தவுடன் 20 மதிப்பெண்கள் கேள்வியை எழுதி வீணாக நேரத்தை கழிக்க வேண்டாம். வரிசைபடி 1, 4,8, மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுதிய பின், 20 மதிப்பெண் கேள்விகள் எழுத வேண்டும். நிகழ்ச்சியில் தரப்பட்ட தினமலர் புளூ பிரிண்ட் புத்தகத்தில் உள்ள கேள்விகளை படித்தால் 150 மதிப்பெண்கள் பெறலாம். பாடப்புத்தகத்தில் நான்கு மதிப்பெண்கள் கேள்விகள் 116 உள்ளன. இன்றும் உங்கள் தேர்வுக்கும் 116 நாட்களே உள்ளன. அதனால் தினமும் ஒரு நான்கு மதிப்பெண்கள் கேள்வியை படிக்க வேண்டும். ஒரு பக்கத்திற்கு 18 வரிகள் எழுத வேண்டும், இதற்கு குறைவாகவோ, அதிகமாகவோ எழுத வேண்டாம்.


நஞ்சையன்

, அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுமுகை (பொருளியல்):  தேர்வில் கேள்வித்தாளை வாங்கியதும், நிதானமாக இரண்டு முறை படிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு கேள்விக்கு உரிய விடையை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். வேகமாக, அழகாக எழுத வேண்டும். பத்து முறை படிப்பதற்கு பதிலாக இரண்டு முறை சொல்லிக் கொண்டே எழுதி பார்த்தால், படித்தற்கு சமமாகும். தேவையான இடத்தில் படம் போடவும். சில முக்கிய வினாக்களை எழுதி கண்ணாடியில் ஒட்ட வைத்து, தினமும் அதை படிக்க வேண்டும்.


ஸ்ரீதேவி

, அரசு மேல்நிலைப்பள்ளி காரமடை (கணக்கு பதிவியல்):  கணக்கு பதிவியலில் உள்ள கணக்குகளை மனப்பாடம் செய்து போட முடியாது. நன்கு புரிந்து கொண்டால் தான் கணக்கு போட முடியும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் அதிக சந்தேகங்கள் கேட்க வேண்டும். கணக்கு மட்டும் போட்டால் போதாது; தியரியும் எழுத வேண்டும். கட்டாயமாக போட வேண்டிய கணக்கை அவசியம் போட்டுத்தான் ஆக வேண்டும். பதிவு முறை, கூட்டாமை, தேய்மானம் இதிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே இதிலுள்ள தியரி, கணக்குகளை திரும்ப திரும்ப போட்டு பார்க்க வேண்டும். கேள்விகளுக்கு தகுந்த முறையில் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us