UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 12:37 PM
அ நிறம் | அளவு
மதுரை காமராஜ் பல்கலையின் 43வது பட்டமளிப்பு விழா, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்தது. துணைவேந்தர் கற்பககுமாரவேல் வரவேற்றார். இஸ்ரோ&' விஞ்ஞானி என்.வேதாச்சலத்திற்கு கவுரவ டாக்டர் பட்டமும், 233 பேருக்கு டாக்டர் (பிஎச்.டி.,) பட்டத்தையும் அவர் வழங்கினார்.
உலக அளவில், நம் கல்விமுறை பெரியது. இவற்றில் சில நிறுவனங்களே வெற்றிகரமாக செயல்படுகின்றன. எல்லா நிறுவனங்களும் வெற்றியடைய திறன்களை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில், உயர்கல்வி பெறும் மாணவர்கள் பயனற்றுப் போய்விடுவர்.
33 சதவீத மாணவர்கள் துவக்கக் கல்வியுடனும், 22 சதவீத மாணவர்கள் பள்ளிப் படிப்புடனும் நின்று விடுகின்றனர். 10 பேரில் நால்வர் தான் உயர்கல்வி செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப பல்கலைகள், மாணவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பித்தால் மட்டும் போதாது.
அவர்களின் நடத்தை உட்பட பல்வேறு திறன்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்புக்கு தகுதியுள்ளவர்களாக தயார்படுத்த வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கும்போது, ஏழைகள் பாதிக்காதவாறு உருவாக்க வேண்டும். பல்கலையின் பெருமையை காக்கும் கடமை மாணவர்களுக்கு உள்ளது. படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் ஒழுக்கம், கடும் உழைப்புடன், தோல்வியைக் கண்டு துவளக்கூடாது. இவ்வாறு வேத் பிரகாஷ் கூறினார். பதிவாளர் சிங்காரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
